Drive logo

இயக்ககத்தின் சேமிப்பிட அம்சங்களை அறியவும்

உங்கள் உள்ளடக்கம், உங்கள் வழி - இயக்கக அம்சங்கள்

 

உங்கள் சேமிப்பிடமானது இயக்ககம், Gmail மற்றும் Google Photos உடன் செயல்படுவதால், இயக்ககத்தில் நேரடியாகக் கோப்புகளைச் சேமிக்கலாம், மின்னஞ்சல் இணைப்புகளைச் சேமிக்கலாம் மற்றும் படங்களைக் காப்புப் பிரதி எடுக்கலாம். உங்களுக்குத் தேவையெனில் அதிக அளவு கொண்ட மேகக்கணிச் சேமிப்புத் திட்டத்தையும் வாங்கலாம்.

15 ஜி.பை. இலவச Google இயக்ககச் சேமிப்பிட லோகோ

படங்கள், வீடியோக்கள், விளக்கக்காட்சிகள், PDFகள், Microsoft Office கோப்புகள் என எந்த வகைக் கோப்பாக இருந்தாலும் பரவாயில்லை, எல்லாவற்றையும் இயக்ககத்தில் பாதுகாப்பாகச் சேமிக்கலாம்.

படங்கள், ஆவணங்கள், இசை போன்றவை அடங்கிய Google இயக்ககக் கோப்பு வகைப் பட்டியல்

இயக்ககத்தில் இருக்கும் கோப்புகள், நீங்கள் பகிராத வரை தனிப்பட்டதாக இருக்கும். நீங்கள் தேர்வுசெய்யும் எந்தவொரு கோப்பையும் அல்லது கோப்புறையையும் பார்க்க, கருத்துத் தெரிவிக்க மற்றும் திருத்த, பிறரை விரைவாக அழைக்கலாம். மேலும் ஆன்லைனில் எளிதாகக் கூட்டுப்பணியாற்றலாம்.

Google இயக்ககத் தனியுரிமை மற்றும் பகிர்தல் விருப்பங்கள்

உங்கள் கோப்பு அதிகப் பாதுகாப்புடன் இருக்கும். எனவே உங்கள் ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் அல்லது கணினிக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும், இயக்ககத்தில் உள்ள அனைத்துக் கோப்புகளும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும். SSLஐ (Gmail மற்றும் பிற Google சேவைகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு நெறிமுறை) பயன்படுத்தி இயக்ககம் முறைமையாக்கப்படும்.

Google இயக்ககப் பாதுகாப்புப் பூட்டு

Google உடன் செயலாற்றும்படி உருவாக்கப்பட்டது

 
ஒரே கிளிக்கில் இயக்ககத்தில் சேமிக்கப்படுகிற Gmail பட இணைப்பு

Gmail இல் இணைப்பின் மேலே சுட்டியின் கர்சரைக் கொண்டு சென்று, இயக்கக லோகோ காட்டப்படுகிறதா எனப் பார்க்கவும். உங்கள் இணைப்புகளைப் பாதுகாப்பாக ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துப் பகிர்வதற்கு, எந்த இணைப்பையும் உங்கள் இயக்ககத்தில் சேமிக்கலாம்.

ஒரே கிளிக்கில் இயக்ககத்தில் சேமிக்கப்படுகிற Gmail பட இணைப்பு

இயக்ககத்தால் உங்கள் படங்களில் உள்ள பொருட்களையும் ஸ்கேன் செய்த ஆவணங்களில் உள்ள உரையையும் அடையாளங்காண முடியும். இதன் மூலம், "ஈஃபிள் கோபுரம்" போன்ற அதிலுள்ள சொல்லைத் தேடலாம், மேலும் அந்தச் சொல்லுடனான உரை ஆவணங்களைப் பெறுவதோடு, ஈஃபிள் கோபுரத்தின் அசல் படங்களையும் பெறலாம்.

Google இயக்ககத்தில் சேமிக்கப்பட்டு, Google+ இல் பகிரப்பட்டுள்ள ஒரேகான் கடற்கரையின் படம்

இயக்ககத்தில் உங்கள் படங்களைச் சேமித்து, Google Photos மூலம் அவற்றிற்கு உயிரூட்டலாம். அதிகச் சிரமப்படாமல், சிறப்பாக எடிட் செய்த தோற்றத்தைப் பெறலாம், அனிமேஷன்கள், திரைப்படங்கள் மேலும் பல அம்சங்கள் உள்ளன.

Chromebookகளில் Google இயக்ககத் தரவு

Chromebookகளில் Google இயக்ககம் உள்ளமைக்கப்பட்டுள்ளதால், உங்கள் கோப்புகளும், படங்களும் தானாகவே காப்புப் பிரதி எடுக்கப்படும். புத்தம்புதிய Chromebookகளுடன் இரண்டு ஆண்டுகளுக்கு 100ஜி.பை. சேமிப்பகத்தை இலவசமாகப் பெறுவீர்கள்.

 

பயன்பாடுகளைப் பயன்படுத்தி வேலையை எளிதாக முடிக்கலாம்

 

எங்கள் ஆவணம், விரிதாள் மற்றும் ஸ்லைடு பயன்பாடுகளின் மூலம், ஆவணங்களையும் கோப்புகளையும் உருவாக்கலாம், அவற்றைப் பிறருடன் வேகமாகப் பகிர்ந்து கூட்டுப்பணியாற்றலாம், விரிதாள்களை மேம்படுத்தலாம், விளக்கக்காட்சியைத் தயார்செய்யலாம்.

பகிரும் வசதி கொண்ட Google இயக்ககம், ஆவணம், விரிதாள் மற்றும் ஸ்லைடு

Google படிவங்கள்: எளிய ஆன்லைன் படிவத்தின் மூலம், கருத்துக்கணிப்பு நடத்தலாம் அல்லது குழுப் பங்கேற்பாளர்கள் பட்டியலை விரைவாக உருவாக்கலாம். பின்னர், விரிதாளில் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட முடிவுகளைப் பார்க்கலாம்.

Google இயக்ககத்தில் உள்ள Google படிவங்களின் எடுத்துக்காட்டு

Google வரைபொருள் மூலம் வரைபடங்களை வரையலாம், செயல் விளக்கப்படங்களை உருவாக்கலாம், மேலும் அவற்றை எளிதாக ஆவணங்களில் சேர்க்கலாம் அல்லது இணையதளத்தில் உட்பொதிக்கலாம்.

Google வரைபொருள் ஐகான்

உங்கள் சுயவிவரப் படத்தைத் திருத்தலாம், லேண்ட்ஸ்கேப்பிங் செய்யலாம், மன வரைபடத்தை உருவாக்கலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம். பலவற்றைச் செய்வதற்கு உதவும் வகையில், நூற்றுக்கும் மேற்பட்ட இயக்ககப் பயன்பாடுகள் உள்ளன. Chrome இணைய அங்காடியில் இயக்ககத் தொகுப்பு என்பதிலிருந்து ஏதேனும் ஒன்றை நிறுவி அவற்றைப் பயன்படுத்திப் பார்க்கவும்.

100க்கும் மேற்பட்ட Google இயக்ககப் பயன்பாடுகள்

இன்னும் அதிகமாக இயக்ககத்தைப் பயன்படுத்தலாம்

 
Android மொபைலில் படமெடுத்து இயக்ககத்தில் ஆவணமாகச் சேமிப்பதற்கான எடுத்துக்காட்டு

Androidக்கான இயக்ககம் மூலம் உங்கள் பேப்பர் ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம். ரசீதுகள், கடிதங்கள், அறிக்கைகள் போன்ற முக்கிய ஆவணங்களைப் படமெடுத்தால் போதும், இயக்ககம் அவற்றை உடனடியாக PDFகளாகச் சேமிக்கும்.

Google இயக்கக ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் ஸ்விட்ச்

ஆஃப்லைனில் கோப்புகளைக் கிடைக்கும்படி செய்கிறது, இதன்மூலம் விமானப் பயணத்தில் அல்லது இணைப்புச் சரியாக இல்லாத கட்டடத்திற்குள் இருத்தல் போன்ற சமயங்களில் உங்கள் மொபைல் அல்லது டேப்லெட் சேவைகளை இழந்தாலும், நீங்கள் கோப்புகளைப் பார்க்கலாம்.

Google இயக்ககக் கோப்பு மீள்திருத்த வரலாற்றின் எடுத்துக்காட்டு

பெரும்பாலான கோப்பு வகைகளில், கடந்த 30 நாட்கள் வரையிலான முந்தைய பதிப்புகளைப் பார்க்க முடியும். மேலும் மாற்றங்களைச் செய்துள்ளவர்களை எளிதாகப் பார்க்க முடிவதோடு, முந்தைய பதிப்புகளுக்குச் செல்லவும் முடியும். கோப்பின் பதிப்பாக்கம் எளிதாக்கப்பட்டுள்ளது.